என் மலர்

  இந்தியா

  இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 14,917 ஆக உயர்வு
  X

  இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 14,917 ஆக உயர்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 14,238 பேர் மீண்டு வீடு திரும்பினர்.
  • கொரோனா பாதிப்பு காரணமாக மேலும் 32 பேர் இறந்துள்ளனர்.

  புதுடெல்லி:

  இந்தியாவில் கொரோனாவால் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,917 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது.

  நேற்று பாதிப்பு 14,092 ஆக இருந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக டெல்லியில் 2,162, மகாராஷ்டிரத்தில் 2,082 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 42 லட்சத்து 68 ஆயிரத்து 381 ஆக உயர்ந்தது.

  அதே நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 14,238 பேர் மீண்டு வீடு திரும்பினர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 36 லட்சத்து 23 ஆயிரத்து 804 ஆக உயர்ந்தது.

  தற்போது 1,17,508 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 647 அதிகம் ஆகும்.

  கொரோனா பாதிப்பு காரணமாக மேலும் 32 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,27,069ஆக உயர்ந்துள்ளது.

  Next Story
  ×