search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கொரோனா தினசரி பாதிப்பு 15 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது
    X

    கொரோனா தினசரி பாதிப்பு 15 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது

    • கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியே 32 லட்சத்து 46 ஆயிரத்து 829 பேர் குணம் அடைந்துள்ளனர்.
    • நாடு முழுவதும் நேற்று 30,42,476 டோஸ்களும், இதுவரை 202 கோடியே 50 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 16,866 ஆக இருந்த நிலையில் இன்று 15 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்ததது.

    இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,830 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.

    மொத்த பாதிப்பு 4 கோடியே 39 லட்சத்து 20 ஆயிரத்து 451 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பால் மேலும் 36 பேர் இறந்துள்ளனர். இதுவரை தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,26,110 ஆக உயர்ந்தது.

    கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியே 32 லட்சத்து 46 ஆயிரத்து 829 பேர் குணம் அடைந்துள்ளனர். இதில் நேற்று 18,159 பேர் அடங்குவர்.

    தற்போது 1,47,512 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்றை விட 3,365 குறைவு ஆகும்.

    நாடு முழுவதும் நேற்று 30,42,476 டோஸ்களும், இதுவரை 202 கோடியே 50 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

    இதற்கிடையே நேற்று 4,26,102 மாதிரிகளும், இதுவரை 87.31 கோடி மாதிரிகளும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×