என் மலர்tooltip icon

    இந்தியா

    பீகாரிலும் அருள்பாலிக்க உள்ள எம்பெருமான் - TTD-க்கு 10.11 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது மாநில அரசு!
    X

    பீகாரிலும் அருள்பாலிக்க உள்ள 'எம்பெருமான்' - TTD-க்கு 10.11 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது மாநில அரசு!

    • பாட்னாவின் முக்கிய பகுதியான மொகாமாவில் ஒதுக்கப்பட்டுள்ள இந்த நிலம் 99 ஆண்டுகளுக்கு ரூ. 1 என்ற குத்தகை வாடகையுடன் வழங்கப்பட்டுள்ளது.
    • பீகார் மாநில சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் இயக்குநருடன், திருப்பதி தேவஸ்தான குழு விரைவில் பேச்சுவார்த்தை

    பீகாரின் தலைநகரான பாட்னாவில் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயில் (ஏழுமலையான் கோயில்) கட்டுவதற்காக, திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு 10.11 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது அம்மாநில அரசு. பீகார் தலைமைச் செயலாளர் பிரத்யா அம்ரித், திருப்பதி தேவஸ்தான தலைவர் பி.ஆர். நாயுடுவுக்கு எழுதிய கடிதத்தில், இத்தகவலை உறுதிப்படுத்தினார்.

    பாட்னாவில் முக்கிய பகுதியான மொகாமா பகுதியில் ஒதுக்கப்பட்டுள்ள இந்த நிலம் 99 ஆண்டுகளுக்கு ரூ. 1 என்ற குத்தகை வாடகையுடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு மற்றும் அமைச்சர் என். லோகேஷ் ஆகியோர் அன்புடன் வரவேற்றுள்ளனர். பாட்னாவில் ஏழுமலையான் கோயில் கட்ட ஒப்புக்கொண்டதற்கு தேவஸ்தான தலைவர் பி.ஆர். நாயுடு மகிழ்ச்சி தெரிவித்தார்.

    இந்த நடவடிக்கை பீகார் அரசின் கலாச்சார உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதற்கான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது என்றார். மேலும் கோயில் கட்டுமானத்திற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் திட்டமிடவும், செயல்படுத்தவும் பீகார் மாநில சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் இயக்குநருடன், திருப்பதி தேவஸ்தான குழு விரைவில் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் எனவும் தெரிவித்தார்.

    Next Story
    ×