என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா (National)
X
காற்று மாசு அதிகரிப்பு- டெல்லியில் டீசல் லாரிகளுக்கு தடை
BySuresh K Jangir5 Nov 2022 6:30 AM GMT (Updated: 5 Nov 2022 8:33 AM GMT)
- தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருவது அம்மாநில பொதுமக்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.
- அரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் வீட்டில் இருந்தபடி பணியாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருவது அம்மாநில பொதுமக்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. அண்டை மாநிலமான பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் விவசாய கழிவுகளை தொடர்ந்து எரித்து வருவதால் இந்த காற்று மாசு உருவாகி வருகிறது. இதையடுத்து இன்று முதல் தொடக்கபள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. அரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் வீட்டில் இருந்தபடி பணியாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
காற்று மாசு அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த டெல்லி நகருக்குள் டீசல் லாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி வரும் லாரிகளுக்கு மட்டும் விதி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. கியாஸ் மற்றும் மின்சார வாகனங்கள் மட்டும் டெல்லிக்குள் வர அனுமதிக்கபடுகிறது.
Next Story
×