search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டெல்லியில் கொரோனா பாதிப்பு 6 மாதங்களில் இல்லாத அளவில் உயர்வு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    டெல்லியில் கொரோனா பாதிப்பு 6 மாதங்களில் இல்லாத அளவில் உயர்வு

    • கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 15,549 பேர் மீண்டுள்ளனர்.
    • கொரோனாவில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 34 லட்சத்து 99 ஆயிரத்து 659 ஆக உயர்ந்தது.

    புதுடெல்லி:

    கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,167 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.

    இதில் அதிகபட்சமாக டெல்லியில் 2,423 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கடந்த ஜனவரி 22-ந் தேதிக்கு பிறகு இதுவரை இல்லாத அளவில் தினசரி பாதிப்பில் அதிகம் ஆகும்.

    அங்கு நேற்று 16,186 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில் தொற்று பாதிப்பு விகிதம் 14.97 ஆக உயர்ந்துள்ளது.

    கர்நாடகாவில் 1,837, மகாராஷ்டிரத்தில் 1,812, கேரளாவில் 1,158, தமிழ்நாட்டில் 1,057 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 61 ஆயிரத்து 899 ஆக உயர்ந்தது.

    கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 15,549 பேர் மீண்டுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 34 லட்சத்து 99 ஆயிரத்து 659 ஆக உயர்ந்தது.

    தற்போது 1,35,510 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 577 அதிகம் ஆகும்.

    தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 41 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,26,730 ஆக உயர்ந்துள்ளது.

    Next Story
    ×