என் மலர்

  இந்தியா

  கொரோனா தினசரி பாதிப்பு 16,464 ஆக சரிவு
  X

  கொரோனா தினசரி பாதிப்பு 16,464 ஆக சரிவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கொரோனா பாதிப்பால் தற்போது 1,43,989 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • கொரோனா பாதிப்பு காரணமாக மேலும் 39 பேர் இறந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 5,26,396 ஆக உயர்ந்துள்ளது.

  புதுடெல்லி:

  இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 நாட்களாக 20 ஆயிரத்தை தாண்டியிருந்த நிலையில் நேற்று 19,673 ஆக குறைந்தது. இந்நிலையில் இன்று காலை மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,464 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 40 லட்சத்து 36 ஆயிரதது 275 ஆக உயர்ந்தது.

  தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 16,112 பேர் மீண்டுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 33 லட்சத்து 65 ஆயிரத்து 890 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 1,43,989 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்றை விட 313 அதிகம் ஆகும்.

  கொரோனா பாதிப்பு காரணமாக மேலும் 39 பேர் இறந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 5,26,396 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 204 கோடியே 34 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதில் நேற்று 8,34,167 டோஸ்கள் அடங்கும்.

  Next Story
  ×