என் மலர்

  இந்தியா

  கேரளாவில் பருவமழை தீவிரம்- 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
  X
  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

  கேரளாவில் பருவமழை தீவிரம்- 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கண்ணூர், இடுக்கி மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
  • கேரளாவில் வருகிற 9-ந் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

  திருவனந்தபுரம்:

  கேரளாவில் தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. மாநிலம் முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. பல இடங்களில் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

  கண்ணூர், இடுக்கி மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

  இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  கேரளாவில் வருகிற 9-ந் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மலையோர மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

  இதுபோல கடற்கரை பகுதியிலும் சூறைக்காற்று வீசும். காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என கூறப்பட்டுள்ளது.

  Next Story
  ×