search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    ராகுல் காந்தி நாட்டின் பிரதமராக முடியாது: பசவராஜ் பொம்மை பேச்சு
    X

    ராகுல் காந்தி நாட்டின் பிரதமராக முடியாது: பசவராஜ் பொம்மை பேச்சு

    • காங்கிரஸ் ஆட்சியில் நிறைய ஊழல்கள் நடைபெற்றன.
    • கர்நாடக மக்கள் பொய்யை நம்ப மாட்டார்கள்.

    பெங்களூரு :

    யாதகிரி மாவட்ட பா.ஜனதா சார்பில் ஜனசங்கல்ப பொதுக்கூட்டத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு பேசியதாவது:-

    நாட்டை பற்றியோ அல்லது கர்நாடகத்தை பற்றியோ ராகுல் காந்திக்கு ஒன்றும் தெரியாது. மக்களின் உணர்வுகள் என்ன என்பதும் அவருக்கு தெரியாது. காங்கிரஸ் ஆட்சியில் நிறைய ஊழல்கள் நடைபெற்றன. அதுகுறித்த ஆவணங்களை அவருக்கு அனுப்பி வைப்பேன். ராகுல் காந்தி நாட்டின் பிரதமராக முடியாது.

    ஊழல் விவரங்களை அனுப்பி வைப்பேன் என்று நான் கூறியதும் காங்கிரஸ் தலைவர்களுக்கு ஆதங்கம் ஏற்பட்டுள்ளது. நான் ஆதாரங்களுடன் பேசுகிறேன். ஆனால் காங்கிரசார் எனது அரசு மீது ஆதாரமற்ற ஊழல் குற்றச்சாட்டுகளை கூறுகிறார்கள். நாங்கள் ஒன்றும் மரக்கன்றுகள் கிடையாது.

    முழுவதுமாக வேர்களுடன் வளர்ந்த மரங்கள். கர்நாடக மக்கள் பொய்யை நம்ப மாட்டார்கள். சமுதாயத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கு ஊழலற்ற சிறப்பான நிர்வாகத்தை வழங்க உறுதி பூண்டுள்ளோம். நாங்கள் தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளோம். ஆனால் மாநிலத்தில் 50 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் அந்த சமூக மக்களின் நலனில் அக்கறை செலுத்தவில்லை.

    முந்தைய காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) ஆட்சியில் நாகமோகன்தாஸ் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு பரிந்துரைத்த அம்சங்களை நாங்கள் அமல்படுத்தி இட ஒதுக்கீட்டை உயர்த்தியுள்ளோம். இந்த கல்யாண-கர்நாடகத்தின் வளர்ச்சிக்கு அடுத்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×