search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திருப்பதியில் சாய்ந்து விழுந்த மரங்கள்.
    X
    திருப்பதியில் சாய்ந்து விழுந்த மரங்கள்.

    சூறைகாற்றுடன் மழை- திருப்பதியில் பக்தர்கள் செல்லும் வழியில் மரங்கள் சாய்ந்தது

    கோடை விடுமுறை என்பதால் தற்போது திருப்பதியில் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு குவிந்து வருகின்றனர்.
    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் திருப்பதியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று மாலை கருமேகங்கள் சூழ்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. லேசாக சாரல் மழை செய்தது.

    கோடை விடுமுறை என்பதால் தற்போது திருப்பதியில் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு குவிந்து வருகின்றனர். சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் பக்தர்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.

    இந்தநிலையில் மாலை 5 மணிக்கு திடீரென சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது. சூறாவளி காற்று வீசியதால் மரங்கள் வேரோடு சாய்ந்தது. சாலைகள் மற்றும் மின்கம்பங்கள் மீது விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சாலைகளில் மரம் விழுந்ததால் வாகனங்கள் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

    பக்தர்கள் செல்லும் வழியிலும் மரக்கிளைகள் முறிந்து விழுந்தது. மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

    இதையடுத்து அதிகாரிகள் சாலையில் விழுந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர்.

    திருப்பதியில் நேற்று 72,758 பேர் தரிசனம் செய்தனர் 40,504 பேர் முடி காணிக்கை செலுத்தினர் ரூ.4.81 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.



    Next Story
    ×