என் மலர்

  இந்தியா

  வினய்குமார் சக்சேனா
  X
  வினய்குமார் சக்சேனா

  டெல்லி துணைநிலை ஆளுநராக வினய்குமார் சக்சேனா நியமனம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வினய்குமார் சக்சேனா காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையத்தின் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
  புதுடெல்லி:

  தலைநகர் டெல்லியில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது.

  ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான அனில் பைஜால் கடந்த 2016-ம் ஆண்டு டெல்லி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார். பதவி காலத்தில் அவருக்கும், டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கும் இடையே பல விஷயங்களில் மோதல் ஏற்பட்டது.

  இதற்கிடையே, கடந்த சில தினங்களுக்கு முன் அனில் பைஜால் ஆளுநர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பிவைத்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பதவி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

  இந்நிலையில், டெல்லியின் புதிய துணைநிலை ஆளுநராக வினய்குமார் சக்சேனாவை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

  Next Story
  ×