என் மலர்

  இந்தியா

  கசியும் சமையல் எண்ணெயை சேகரிக்கும் மக்கள்
  X
  கசியும் சமையல் எண்ணெயை சேகரிக்கும் மக்கள்

  டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து- கொட்டிய சமையல் எண்ணெயை சேகரிக்க குவிந்த கிராம மக்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பரபரப்பான சாலையில் விபத்து ஏற்பட்டாலும் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  மும்பை- அகமதாபாத் நெடுஞ்சாலையில் சமையல் எண்ணெய்  டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால், லாரியில் இருந்த 12 ஆயிரம் லிட்டர் சமையல் எண்ணெய் சாலையில் கசிந்தது.

  டேங்கர் லாரி சாலையின் ஓரம் கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பில்லை. என்றாலும், சாமையல் எண்ணெய் கசிவதை கண்ட அக்கிராம மக்கள் எண்ணெய் கேன்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

  சாலையில் மக்கள் போட்டிப் போட்டுக் கொண்டு கசிந்துக் கொண்டிருந்த எண்ணெயைச் சேமித்து சமையலுக்கு வீட்டிற்கு எடுத்துச் சென்றனர்.

  இதேபோல், கடந்த வியாழக்கிழமை மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் மும்பை- அகமதாபாத் நெடுஞ்சாலையில் திரவ அமோனியா நிரப்பப்பட்ட டேங்கர் லாரி டெம்போவுடன் மோதி விபத்துக்குள்ளானது.

  இந்த விபத்தால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டாலும் விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

  இதையும் படியுங்கள்.. டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் தீ விபத்து
  Next Story
  ×