என் மலர்

  இந்தியா

  சாலை விபத்து
  X
  சாலை விபத்து

  சத்தீஸ்கரில் மினி சரக்கு வாகனம் மீது லாரி மோதி விபத்து- 4 பேர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய லாரி ஓட்டுனரை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
  சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டம் தகாத்பூர் காவல் நிலைய எல்லைக்குப்பட்ட பிலாஸ்பூர்- முங்கேலி சாலையில் தகாத்பூரிலிருந்து ஜர்ஹகான் கிராமத்திற்குச் லாரி சென்றுக் கொண்டிருந்தது.

  அப்போது, எதரே வந்த சரக்கு வாகனம் மீது லாரி மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.

  இந்த விபத்தில் சரக்கு வானத்தில் இருந்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மற்றொருவர் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

  இறந்தவர்கள்,  புனேஷ்வர் சாஹூ (36), ஓம்பிரகாஷ் வர்மா (22), ரகுவீர் சாஹூ (24) மற்றும் மகேஷ் சாஹூ (40) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், மகேஷ் பிலாஸ்பூர் தொகுதியின் முன்னாள் பாஜக எம்பி லகன்லால் சாஹூவின் மருமகன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய லாரி ஓட்டுனரை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

  இதையும் படியுங்கள்..  எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
  Next Story
  ×