search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    உச்ச நீதிமன்றம்
    X
    உச்ச நீதிமன்றம்

    ஜி.எஸ்.டி கவுன்சில் பரிந்துரைகள் மத்திய, மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

    ஜிஎஸ்டி விவகாரங்களில் சட்டம் இயற்றுவதற்கு நாடாளுமன்றத்திற்கும் அனைத்து மாநில சட்டமன்றங்களிலும் சம உரிமை உள்ளது என உச்சநீதமன்றம் தெரிவித்துள்ளது.
    ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய வேண்டும் என குஜராத் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்படும் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்றும் கடல் சரக்குகள் மீதான ஒருங்கிணைந்த வரியை ரத்து செய்தும் உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில், "ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கும் முடிவுகளை அமல்படுத்த வேண்டும் என மாநில அரசுகளை ஒன்றிய அரசு நிர்பந்திக்க முடியாது.

    ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கு அறிவுரைகள் மற்றும் பரிந்துரைகள் மட்டுமே வழங்கலாம். ஜி.எஸ்.டி கவுன்சில் பரிந்துரைகள் மத்திய மற்றும் மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது. அப்படி செய்தால் அது கூட்டாட்சி அமைப்பை பாதிக்கும். ஜிஎஸ்டி விவகாரங்களில் சட்டம் இயற்றுவதற்கு நாடாளுமன்றத்திற்கும் அனைத்து மாநில சட்டமன்றங்களிலும் சம உரிமை உள்ளது. இந்தியாவில் ஜனநாயகமும், கூட்டாட்சியும் ஒன்றை ஒன்று சார்ந்தே உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்" தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படியுங்கள்.. பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதை கட்டாயமாக்கலாம்- சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
    Next Story
    ×