என் மலர்
இந்தியா

பா சிதம்பரம், கார்த்தி சிதம்பரம்
ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை
இதுகுறித்து எம்பி கார்த்திக் சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், எத்தனை முறை தான் சோதனை நடத்துவீர்கள் என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட 7 இடங்களில் சோதனை நடைபெறுகிறது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் 7 சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர் வெளிநாட்டு பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து எம்பி கார்த்திக் சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், எத்தனை முறை தான் சோதனை நடத்துவீர்கள் என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
Next Story