என் மலர்

  இந்தியா

  பெண் வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்தப்படும் காட்சி
  X
  பெண் வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்தப்படும் காட்சி

  நடுரோட்டில் பெண் வழக்கறிஞரை கொடூரமாக தாக்கும் நபர்- பரபரப்பு வீடியோ

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இருவரும் இதற்கு முன்பே பலமுறை சண்டையிட்டுள்ளதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
  பாகல்கோட்:

  கர்நாடகா பாகல்கோட் மாவட்டம், விநாயக் நகர் அருகே பெண் வழக்கறிஞர் ஒருவர் சாலையில் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  பெண் வழக்கறிஞரான சங்கீதா என்பவரை மாந்தேஷ் என்பவர் சாலையில் கொடூரமாக தாக்குகிறார். அவர் கன்னத்தில் ஓங்கி அறைந்து, வயிற்றில் எட்டி மிதிக்கிறார். உடனே சங்கீதா தன்னை பாதுகாத்துகொள்ள கீழே இருக்கும் பிளாஸ்டிக் நாற்காலியை எடுக்கிறார். அதையும் அந்த நபர் எட்டி உதைக்கிறார்.

  நடுரோட்டில் நடைபெறும் இந்த சம்பவத்தை சுற்றி உள்ளவர்கள் அனைவரும் வேடிக்கை பார்த்தபடி இருந்தாலும், யாரும் அருகே சென்று தாக்குதல் நடத்துபவரை தடுக்கவும் இல்லை. பெண்ணுக்கு உதவவும் இல்லை.

  இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பாகி உள்ளது.

  இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், பெண் வழக்கறிஞரை தாக்கிய நபரை கைது செய்துள்ளோம். ஒரு வழக்கு தொடர்பான தனிப்பட்ட வன்மம் காரணமாக அந்த பெண்ணை மாந்தேஷ் தாக்கியுள்ளார். அந்த பெண் வழக்கறிஞர் தன்னை தொடர்ந்து கொடுமைப்படுத்தியதாக குற்றம் சாட்டியும் உள்ளார் என தெரிவித்துள்ளனர்.

  இருவரும் இதற்கு முன்பே பலமுறை சண்டையிட்டுள்ளதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.


  Next Story
  ×