search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜேசிபி இயந்திரம்
    X
    ஜேசிபி இயந்திரம்

    நாளை 11 மணிக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை என்றால் புல்டோசர் கொண்டுவரப்படும்- பாஜக தலைவருக்கு ஆம் ஆத்மி மிரட்டல்

    தென்கிழக்கு டெல்லியில் உள்ள மதன்பூர் காதர் பகுதியில் இருந்து ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானதுல்லா கான் நேற்று கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து ஆம் ஆத்மிக்கும் பாஜகவுக்கும் வார்த்தைப் போர் நடந்து வருகிறது.
    டெல்லியில் பாஜக ஆளும் உள்ளாட்சி அமைப்பு சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. தென்கிழக்கு டெல்லியில் உள்ள மதன்பூர் காதர் பகுதியில் இருந்து ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானதுல்லா கான் நேற்று கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து ஆம் ஆத்மிக்கும் பாஜகவுக்கும் வார்த்தைப் போர் நடந்து வருகிறது.

    இதற்கிடையே ஆக்கிரமிப்பு தொடர்பாக, பாஜக மாநில தலைவர் ஆதேஷ் குப்தா கூறுகையில், " டெல்லியில் உள்ள ரோஹிங்கியா ஆக்கிரமிப்பாளர்களையும், ஆம் ஆத்மி தலைவர்களால் பாதுகாக்கப்பட்ட கலவரக்காரர்களையும் ஆம் ஆத்மி பாதுகாத்து வருகிறது. டெல்லி அரசுக்கு ஏழை மக்கள் மீது அக்களை இருந்தால் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை செயல்படுத்தியிருக்க வேண்டும். மக்களுக்கு வசிக்க நிரந்தர வீடுகளை வழங்கியிருப்பீர்கள். அதனால் ஆக்கிரமிப்புகளை இடிப்பதில் அரசியல் செய்யாதீர்கள்" என்று அவர் கூறினார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானதுல்லா கான் கூறியதாவது:-

    பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா பொது நிலத்தை ஆக்கிரமித்து கட்டியுள்ள தனது வீடு மற்றும அலுவலகத்தை அகற்ற வேண்டும். இதுதொடர்பாக நாங்கள் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  நாளை காலை 11 மணிக்குள் ஆதேஷ் குப்தா ஆக்கிரமிப்பை அகற்றவில்லை என்றால் புல்டோசருடன் அவரது வீட்டிற்கு செல்வோம்.

    இவ்வாறு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதையும் படியுங்கள்.. திட்டமிட்டபடி வருகிற 21ந்தேதி நடக்கும்- முதுநிலை நீட் தேர்வை தள்ளி வைக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
    Next Story
    ×