search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கோப்புப் படம்
    X
    கோப்புப் படம்

    ஜம்மு காஷ்மீர் - பயங்கரவாதிகள் தாக்குதலில் போலீஸ்காரர் உயிரிழப்பு

    ஜம்மு காஷ்மீரில் அரசு ஊழியர் ஒருவரை அவரது அலுவலகத்தில் வைத்து பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்ற சம்பவத்துக்கு அப்பகுதி பண்டிதர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் புட்காம் மாவட்டம் சதூரா பகுதியில் நேற்று அரசு ஊழியர் பண்டிதர் ராகுல் பாத்தை அவரது அலுவலகத்தில் வைத்து பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இதுதொடர்பாக கடும் கண்டனங்கள் எழுந்தன.

    இதற்கிடையே, பள்ளத்தாக்கில் வேலை செய்யும் புலம் பெயர்ந்த பண்டிதர்கள் அரசு தங்களைப் பாதுகாக்க தவறிவிட்டது என குற்றம் சாட்டினர்.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் அமைந்துள்ள குதூரா கிராமத்தில் காவலர் ரியாஸ் அகமது தாக்கூர் வசித்து வந்தார். இன்று காலை ரியாஸ் அகமது மீது பயங்கரவாதிகளால் தாக்குதல் நடத்தினர்.

    இதுகுறித்து போலீசார் கூறுகையில்,  குதூரா பகுதியில் உள்ள வீட்டில் இருந்த காவலர் ரியாஸ், அவரது மகன் அலி அகமது ஆகியோர்மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். 

    படுகாயம் அடைந்த ரியாஸ் அகமதை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என போலீசார் தெரிவித்தனர். பயங்கரவாதிகள் நடமாட்டத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் சுற்றி வளைத்து, தேடும் பணிகளை தீவிரப்படுத்தினர்.

    கடந்த 24 மணி நேரத்தில் பயங்கரவாதிகளின் நடத்திய இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.
    Next Story
    ×