search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மகன் மீது வழக்குத் தொடர்ந்த தம்பதி
    X
    மகன் மீது வழக்குத் தொடர்ந்த தம்பதி

    ஒரு வருடத்திற்குள் பேரக்குழந்தை அல்லது ரூ. 5 கோடி இழப்பீடு- மகன் மீது வழக்கு தொடர்ந்த தம்பதி

    பேரக்குழந்தை வேண்டும் என்ற ஆசையில் மகனுக்கு 2016-ம் ஆண்டில் திருமணம் செய்து வைத்தோம். நாங்கள் குழந்தையின் பாலினத்தைப் பற்றி கவலைப்படவில்லை என்று தம்பதி குறிப்பிட்டிருந்தனர்.
    உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவர் தனது மனைவியுடன் ஹரிதுவாரில் வசித்து வருகிறார். இவரது மகன் அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    இந்நிலையில், பிரசாந்த் தனது மகன் மற்றும் மருமகளுக்கு எதிராக வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

    அது தொடர்பான புகார் மனுவில், எனது பணத்தை எல்லாம் கொடுத்து மகனை அமெரிக்காவில் படிக்க வைத்தேன். இப்போது என்னிடம் பணம் இல்லை. வங்கியில் கடன் வாங்கிதான் வீடு கட்டினேன். பொருளாதார ரீதியாகவும், தனிப்பட்ட வகையிலும் நானும் எனது மனைவியும் சிரமப்படுகிறோம். அதனால், மகன் மற்றும் மருமகளிடம் இருந்து தலா ரூ.2.5 கோடி இழப்பீடாக கேட்டுள்ளோம்.

    மேலும், பேரக்குழந்தை வேண்டும் என்ற ஆசையில் மகனுக்கு 2016-ம் ஆண்டில் திருமணம் செய்து வைத்தோம். நாங்கள் குழந்தையின் பாலினத்தைப் பற்றி கவலைப்படவில்லை. எங்களுக்கு தேவை ஒரு பேரக்குழந்தை என்று குறிப்பிட்டிருந்தார்.

    இந்த வழக்கு உத்தரகாண்ட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரசாத் தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். அவர் இந்த வழக்கு சமூகத்தின் உண்மையை சித்தரிக்கிறது என்றார்.

    மேலும், நாம் தங்கள் குழந்தைகளுக்காக முதலீடு செய்கிறோம். நல்ல நிறுவனங்களில் வேலை செய்யும் திறனை உருவாக்குகிறோம். அதனால், பிள்ளைகள் பெற்றோருக்கு அடிப்படை நிதியுதவி வழங்க வேண்டும். இந்த வழக்கில் ஒரு ஆண்டுக்குள் பேரக்குழந்தை அல்லது ரூ.5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறினார்.

    இதையும் படியுங்கள்..கோடை வெப்பம் எதிரொலி- பள்ளி நேரத்தை மாற்றியமைக்க மத்திய அமைச்சகம் அறிவுறுத்தல்
    Next Story
    ×