search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திருமணம்
    X
    திருமணம்

    கலப்பு திருமணம் செய்த பெண்ணிடம் அரசு சலுகைகள் பெற மாட்டேன் என எழுதிய வாங்கிய கிராம பஞ்சாயத்து

    நாசிக்கில் கலப்பு திருமணம் செய்த பெண்ணிடம் அரசு சலுகைகள் எதுவும் பெற மாட்டேன் என கிராம பஞ்சாயத்து எழுதிய வாங்கிய சம்பவம் நடந்து உள்ளது.
    மும்பை :

    நாசிக் மாவட்டம் இகத்பூரி தாலுகா வால்விகிர் கிராமத்தில் பழங்குடியின பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் வேறு சமூகத்தை சேர்ந்த நபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு அந்த பெண், அதே தாலுகா பகுதியில் உள்ள கணவரின் ராயம்பே கிராமத்துக்கு கடந்த 5-ந் தேதி சென்றார். அப்போது அந்த பெண் சார்ந்த சமூகத்தை சேர்ந்த சிலர் அவர்களின் வீட்டுக்கு சென்றனர்.

    அவர்கள் வேறு சமூகத்தை சேர்ந்தவரை திருமணம் செய்த பெண்ணையும், கணவரையும் பஞ்சாயத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்கள் வேறு சமூகத்தை சேர்ந்தவரை திருமணம் செய்ததால், சம்மந்தப்பட்ட பெண் பழங்குடியினர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகளை பெற கூடாது என மிரட்டி எழுதி வாங்கினர். இதுதொடர்பான கடிதத்தில் அந்த பெண், அவரின் கணவரிடம் கையெழுத்தை பெற்று பஞ்சாயத்து தலைவரின் ஸ்டாம்ப்பையும் அடித்தனர்.

    கிராம பஞ்சாயத்தின் இந்த செயலுக்கு வஞ்சித் பகுஜன் அகாடி கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து அந்த கட்சியின் திரிம்பகேஷ்வர் தலைவர் உமேஷ் சோனவானே கூறுகையில்,"சாதி வேறுபாடுகளை குறைக்க அரசு ஊக்குவித்து வருகிறது. மேலும், கலப்பு திருமணத்திற்கு நிதி உதவி வழங்கி வருகிறது. இந்த சம்பவத்தில் பஞ்சாயத்து தலைவர் அவரது பதவியை தவறாக பயன்படுத்தி உள்ளார். அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும். ஜாட் பஞ்சாயத்து மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்." என்றார்.

    இதையும் படிக்கலாம்...இலங்கையில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நாளை காலை 7 மணி வரை நீட்டிப்பு
    Next Story
    ×