search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கின்னஸ் சாதனை படைத்த பால்பாய்ன்ட் பேனா
    X
    கின்னஸ் சாதனை படைத்த பால்பாய்ன்ட் பேனா

    கின்னஸ் சாதனை படைத்த 37 கிலோ எடைக்கொண்ட பால்பாய்ன்ட் பேனா

    பேனாவை பயன்படுத்த குறைந்தது நான்கைந்து பேர் தேவைப்பட்டது. ஆண்கள் பேனாவை தூக்கி காகிதத்தில் எழுதி பயன்படுத்தினர்.
    உலகிலேயே மிகப் பெரிய பால்பாய்ன்ட் பேனா ஒன்றை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளார் ஆச்சார்யா மக்குனுரி ஸ்ரீநிவாசா என்பவர். இந்த பேனா 5.5 மீட்டர் (18 அடி, 0.53 அங்குலம்) நீளம், 37.23 கிலோ எடையும் கொண்டது. இது சாதாரணமாக பயன்படுத்த முடியாது என்றாலும் பேனாவைக் காண்பவர்களை ஆச்சரியப்படுத்துகிறது.

    இந்த பேனாவின் வீடியோ கின்னஸ் உலக சாதனையாளர்கள் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

    அந்த பதிவில், இந்தியப் புராணக் காட்சிகளுடன் பொறிக்கப்பட்ட இந்த பால்பாய்ன்ட் பேனா ஆச்சார்யா மகுனுரி ஸ்ரீனிவாசா என்பவரால் வடிவமைக்கப்பட்டது. ஒரு சிறிய உலோகக் கோளத்தின் உருளும் செயலின் மூலம் பயன்பாட்டின்போது அதன் நுனியில் மை செலுத்துகிறது.

    இந்த பேனாவை பயன்படுத்த குறைந்தது நான்கைந்து பேர் தேவைப்பட்டது. ஆண்கள் பேனாவை தூக்கி காகிதத்தில் எழுதி பயன்படுத்தினர்.

    மேலும், இதுகுறித்து ஆச்சார்யா கூறும்போது, "தனது தாயார் எழுதுவதற்கு பேனாவைக் கொடுக்கும்போதெல்லாம் ஒரு தனித்துவமான பேனாவை வடிவமைப்பேன். இந்த பேனா பித்தளையால் ஆனது. அதில் ஒன்பது வகையான நடனக் காட்சிகள் மற்றும் இந்திய இசைக்கருவிகள் பொறிக்கப்பட்டிருக்கிறது" என்றும் கூறினார்.

    இதையும் படியுங்கள்.. ஜம்மு காஷ்மீரில் விஷ மூலிகை சாப்பிட்ட சிறுவன் பலி- 3 பேருக்கு தீவிர சிகிச்சை
    Next Story
    ×