என் மலர்

  இந்தியா

  கோப்புப்படம்
  X
  கோப்புப்படம்

  ஜம்மு காஷ்மீரில் விஷ மூலிகை சாப்பிட்ட சிறுவன் பலி- 3 பேருக்கு தீவிர சிகிச்சை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் சிறுவர்களை மீட்டு உடனடியாக சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு முகமது பாசித் என்ற சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
  ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராம்பன் மாவட்டம் படோட் பகுதியில் உள்ள ரக்ஜரோஹ் என்ற கிராமத்தின் அருகில் காட்டுப் பகுதியில் நேற்று சிறுவர், சிறுமியர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, சிறுவர்கள் விளையாட்டாக அங்கிருந்த மூலிகைகளை பறித்து சாப்பிட்டுள்ளனர்.

  இதன்பிறகு சிறிது நேரத்தில், சிறுவர்கள் திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் சிறுவர்களை மீட்டு உடனடியாக சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு முகமது பாசித் என்ற சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

  மேலும், முகமது பாசித்தின் சகோதரி ஷப்னம் (10), பக்கத்து வீட்டில் வசிக்கும் சானியா பானோ (10), ரசியா பானோ (8) ஆகியோர் சிறப்பு சிகிச்சைக்காக ஜம்மு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

  இதையடுத்து, அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  இதையும் படியுங்கள்.. இலங்கை பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்‌ஷே ராஜினாமா
  Next Story
  ×