search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்
    X
    குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

    மாணவர்கள் வேலை வழங்குபவர்களாக மாற வேண்டும்- குடியரசு தலைவர் கருத்து

    கல்வி நிறுவனங்கள் ஒவ்வொருவரிடமும் உள்ள மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வரும் இடமாக இருக்க வேண்டும் என்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டுள்ளார்.
    நாக்பூர்:

    நாக்பூர் இந்திய மேலாண்மை கழகத்தில் (ஐஐஎம்) நிரந்தர வளாகத்தை திறந்து வைத்து பேசிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், கல்வி நிலையங்கள் வெறும் கற்கும் இடங்கள் மட்டுமல்ல என்றார்.

     ஒவ்வொரு மாணவரிடம் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வந்து மெருகூட்டும் இடம் அது என்றும் அவர் குறிப்பிட்டார்.

    பாடத்திட்டத்தின் நோக்கம், இலட்சியம் நமக்குள் சுயபரிசோதனை செய்து, அதன் மூலம் நமது கனவுகளை நனவாக்குவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதாக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

    புதுமை மற்றும் தொழில்முனைவு இரண்டும் தொழில்நுட்பத்தின் மூலம் நம் வாழ்க்கையை எளிதாக்குவதோடு மட்டுமல்லாமல், பலருக்கு வேலை வாய்ப்புகளையும் வழங்குகிறது என அவர் கூறினார்.

    மாணவர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலைகளை உருவாக்குபவர்களாக திகழ வேண்டும் என்றும், அத்தகைய மாணவர்களை
    நாக்பூர் ஐஐஎம் உருவாக்கும் என்றும் குடியரசுத் தலைவர் நம்பிக்கை தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கர்ட்காரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×