என் மலர்

  இந்தியா

  துப்பாக்கி சண்டை நடந்த பகுதி
  X
  துப்பாக்கி சண்டை நடந்த பகுதி

  ஜம்மு காஷ்மீர் என்கவுன்டர்- பாகிஸ்தான் பயங்கரவாதி உள்பட 2 பேரை சுட்டுக்கொன்றது ராணுவம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் ஒருவன் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஹைதர் என்பது தெரியவந்துள்ளது.
  ஸ்ரீநகர்:

  ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டம், செயான் தேவ்சர் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

  அப்போது பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. இதில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களின் ஒருவன் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஹைதர் என்பதும், மற்றொருவன் உள்ளூரைச் சேர்ந்தவன் என்பதும் தெரியவந்துள்ளது.

  வடக்கு காஷ்மீரில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு பயங்கரவாத குற்றச்செயல்களில் ஹைதர் ஈடுபட்டு வந்ததாக காஷ்மீர் ஐஜி விஜயகுமார் தெரிவித்துள்ளார். 
  Next Story
  ×