என் மலர்

  இந்தியா

  விபத்தில் உருக்குலைந்த கார்
  X
  விபத்தில் உருக்குலைந்த கார்

  யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் கோர விபத்து- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முன்னால் சென்ற வாகனம் திடீரென பிரேக் போட்டதால், கார் அந்த வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
  மதுரா:

  உத்தர பிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் இன்று அதிகாலையில் நொய்டா நோக்கி காரில் சென்றனர். யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் சென்றபோது மற்றொரு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது. 

  காரில் பயணித்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆக்ரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

  இந்த கோர விபத்து குறித்து தகவல் அறிந்த பிரதமர் மோடி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

  முன்னால் சென்ற வாகனம் திடீரென பிரேக் போட்டதால், கார் அந்த வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். கார் அதிக வேகத்தில் சென்றதால் கார் கடுமையாக சேதமடைந்து, 7 பேர் சம்பவ இடத்திலேயே இறந்ததாக போலீஸ் சூப்பிரெண்டு ஷ்ரிஷ் சந்திரா தெரிவித்தார். 
  Next Story
  ×