search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    அமித் ஷா
    X
    அமித் ஷா

    கொரோனா அலை முடிந்ததும் சிஏஏ அமல்படுத்தப்படும்- மேற்கு வங்காளத்தில் அமித் ஷா பேச்சு

    மேற்கு வங்காளத்தில் ஊழல் மற்றும் பாஜக தொண்டர்கள் படுகொலைகள் இன்னும் நின்றபாடில்லை என உள்துறை மந்திரி அமித் ஷா பேசினார்.
    சிலிகுரி:

    மேற்கு வங்காளத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள உள்துறை மந்திரி அமித் ஷா, சிலிகுரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-

    மேற்கு வங்காள மக்கள், முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மூன்றாவது முறையாக வாய்ப்பு வழங்கி உள்ளனர். அவர் சிறப்பாக செயல்படுவார் என நாங்கள் நினைத்தோம். ஆனால், ஊழல் மற்றும் பாஜக தொண்டர்கள் படுகொலைகள் இன்னும் நின்றபாடில்லை. பாஜக மீண்டும் போராடாது என நினைக்க வேண்டாம். 

    நாட்டில் ஏதாவது சம்பவம் நடக்கும்போதெல்லாம் மம்தா பானர்ஜி ஒரு தூதுக்குழுவை அனுப்புகிறார். ஆனால் 8 பெண்களும் ஒரு குழந்தையும் உயிருடன் எரிக்கப்பட்ட பீர்பூமுக்கு ஏன் தூதுக் குழுவை அனுப்பவில்லை? அவர்கள் இந்த மாநிலத்தின் மக்கள் இல்லையா?

    குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) நடைமுறைப்படுத்தப்படாது என திரிணாமுல் காங்கிரஸ் வதந்தி பரப்புகிறது. ஆனால் கொரோனா அலை முடிந்த பிறகு அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம்.

    இவ்வாறு அமித் ஷா பேசினார்.
    Next Story
    ×