search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    எல்.ஐ.சி
    X
    எல்.ஐ.சி

    எல்.ஐ.சி.யின் பொதுப்பங்கு இன்று முதல் வெளியீடு

    துவக்கத்தில், அரசிடம் உள்ள 5 சதவீத பங்குகளை விற்பனை செய்வதாக முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது 3.5 சதவீத பங்கை விற்பனை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
    புது டெல்லி:

    எல்.ஐ.சி நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீடு இன்று முதல் நடைபெறுகிறது.

    இந்த வெளியீட்டு மூலம் ரூ.21,000 கோடி திரட்ட எல்.சி.சி திட்டமிட்டுள்ளது. இதையடுத்து ஒரு பங்கின் விலை 902 ரூபாயில் இருந்து 949 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பங்கு வெளியீடு மே 9-ஆம் தேதி நிறைவடைகிறது.

    இத்துடன் பங்குகள் வாங்குவதில் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பாலிசிதாரர்களுக்கு 60 ரூபாய் வரையிலும்; சில்லரை முதலீட்டாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு 40 ரூபாய் வரையிலும் தள்ளுபடி வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

    துவக்கத்தில், அரசிடம் உள்ள 5 சதவீத பங்குகளை விற்பனை செய்வதாக முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது 3.5 சதவீத பங்கை விற்பனை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    முதலீட்டாளர்கள் 15 பங்குகளை ( ஒரு லாட்) ரூ.14,235 விலையில் வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×