என் மலர்

  இந்தியா

  நில அதிர்வு
  X
  நில அதிர்வு

  குஜராத் கிராமத்தில் அடுத்தடுத்த 2 நில அதிர்வு- திகைத்து ஓடிய மக்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அடுத்தடுத்த 2 நிலநடுக்கம் அப்பகுதி மக்களை அச்சம் கொள்ள செய்துள்ளது.
  கிர் சோம்நாத்:

  குஜராத் மாநிலம் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள தலாலா கிராமத்தில் அடுத்தடுத்து 2 நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் அச்சமடைந்த கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியே ஓடினர்.

  முதல் நில அதிர்வு தலாலா கிராமத்தில் இருந்து வடகிழக்கில் 13 கி.மீ தொலைவில் காலை 6.58 மணிக்கு ஏற்பட்டது. இந்த நில அதிர்வு 4.0 ரிக்டர் அளவில் பதிவானது. இதை தொடர்ந்து அடுத்த நில அதிர்வு 3.2 ரிக்டர் அளவில் தலாலா கிராமத்தில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில் காலை 7.04 மணிக்கு ஏற்பட்டது.

  இந்த நில அதிர்வினால் உயிர் பாதிப்பு மற்றும் பொருட்கள் சேதம் எதுவும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. ஆனால் அடுத்தடுத்த 2 நிலநடுக்கம் அப்பகுதி மக்களை அச்சம் கொள்ள செய்துள்ளது.
  Next Story
  ×