என் மலர்

  இந்தியா

  செவிலியர் தற்கொலை
  X
  செவிலியர் தற்கொலை

  உ.பியில் பரபரப்பு: பணியில் சேர்ந்த முதல் நாளே தூக்கில் தொங்கிய செவிலியர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் விரைவில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  உத்தர பிரதேசம் மாநிலம் உன்னாவ் மாவட்டத்தின் பங்கர்மாவ் பகுதியில் உள்ள நியூ ஜீவன் நர்சிங் ஹோம் என்கிற முதியோர் இல்லத்தில் செவிலியராக 18 வயது இளம்பெண் சேர்ந்துள்ளார். இவர் நேற்று பணிக்கு சேர்ந்த நிலையில் இன்று காலை முதியோர் இல்லத்தின் தூணில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

  இது குறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார் செவிலியரின் சடலத்தை மீட்டு பிரதேச பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

  இதற்கிடையே, தனது மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகவும், இதன் பின்னணியில் முதியோர இல்லத்தின் மேலாளர் இருப்பதாகவும் அவரது தாய் குற்றம்சாட்டினார்.

  இந்நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் கற்பழிக்கப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

  இருப்பினும், செவிலியரின் தாய் அளித்த புகாரின்பேரில் பல்வேறு பிரிவுகளின் கீழ் மூன்று பேர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் விரைவில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  இதையும் படியுங்கள்.. தொழிலாளர்களுக்கு மே தின வாழ்த்துகளை தெரிவித்தார் மேற்குவங்க முதல்வர் மம்தா
  Next Story
  ×