search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிஜூ ஜனதா தள கட்சியின் எம்எல்ஏ அங்கதா கன்ஹர்
    X
    பிஜூ ஜனதா தள கட்சியின் எம்எல்ஏ அங்கதா கன்ஹர்

    குடும்ப சூழ்நிலையால் இடைநிறுத்தப்பட்ட கல்வியை 40 ஆண்டுகளுக்கு பிறகு தொடரும் ஒடிசா எம்எல்ஏ

    இடைநிலைக் கல்வி வாரியம் நடத்தும் 10-ம் வகுப்புக்கான தனியார் தேர்வில், எம்எல்ஏ அங்கதா கன்ஹர் நேற்று தனது இரு நண்பர்களுடன் ருஜாங்கி உயர்நிலைப் பள்ளியில் ஆங்கிலம் பாடத்தின் முதல் தாள் தேர்வு எழுதினார்.
    ஒடிசா மாநிலம் புல்பானியைச் சேர்ந்தவர் அங்கதா கன்ஹர் (58). பிஜூ ஜனதா தள கட்சியின் எம்எல்ஏவான குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த 1978-ம் ஆண்டு கல்வியைவிட்டு விலிகினார்.

    கல்வியை தொடர முடியவில்லையே என்ற ஆதங்கம் அங்கதா கன்ஹருக்கு ரொம்ப நாளாகவே இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கல்வி கற்க வயது தடையில்லை என்ற பழமொழியை நிரூபிக்கும் வகையில், கன்ஹர் தற்போது ஒடிசாவில் நடைபெற்று வரும் 10-ம் வகுப்பு தேர்வு எழுதுகிறார்.

    அதன்படி, இடைநிலைக் கல்வி வாரியம் நடத்தும் 10-ம் வகுப்புக்கான தனியார் தேர்வில், எம்எல்ஏ அங்கதா கன்ஹர் நேற்று தனது இரு நண்பர்களுடன் ருஜாங்கி உயர்நிலைப் பள்ளியில் ஆங்கிலம் பாடத்தின் முதல் தாள் தேர்வு எழுதினார்.

    தேர்வு அறைக்குள் நுழைவதற்கு முன்பு, கன்ஹர் கூறுகையில், " நான் 1978-ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ஆனால் சில குடும்பப் பிரச்சினையால் தேர்வு எழுத முடியவில்லை. சமீபத்தில் 50 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய பலர் தேர்வு எழுதுகிறார்கள் என்று என்னிடம் கூறப்பட்டது. அதனால் நானும் தேர்வு எழுத முடிவு செய்தேன். பரீட்சை எழுதுவதற்கோ, கல்வி கற்பதற்கோ வயது ஒரு தடை இல்லை" என்றார்.

    இதுகுறித்து ருஜாங்கி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் அர்ச்சனா பாஸ் கூறியதாவது:-

    நாங்கள் எங்கள் பள்ளியில் பொதுத் தேர்வுகள் நடத்துகிறோம். இது திறந்த பள்ளி தேர்வுகள் ஆகும். சில காரணங்களால் படிப்பை பாதியில் நிறுத்த வேண்டியவர்களுக்காக நடத்தப்படும் சிறப்புத் தேர்வு இது. எங்கள் மையத்தில் புல்பானி எம்எல்ஏ அங்கத் கன்ஹர் மற்றும் அவரது நண்பர் உள்பட 63 மாணவர்கள் எஸ்ஐஓஎஸ் தேர்வில் பங்கேற்றுள்ளனர்.

    இந்த தேர்வு மே 10-ம் தேதிக்குள் முடிந்து விடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்.. தெலுங்கானாவில் கட்டிடம் இடிந்து விழுந்து 4 பேர் உடல் நசுங்கி பலி
    Next Story
    ×