search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மணப்பெண் சுட்டுக்கொல்லப்பட்ட பகுதி
    X
    மணப்பெண் சுட்டுக்கொல்லப்பட்ட பகுதி

    உ.பியில் பரபரப்பு- திருமணத்தன்று முன்னாள் காதலனால் மணப்பெண் சுட்டுக்கொலை

    கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருவதாக மதுரா எஸ்பி (ஊரகம்) ஸ்ரீஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
    உத்தரப் பிரதசேம் மாநிலம் மதுராவின் முபாரிக்பூர் கிராமத்தில் உள்ள நௌஜீல் பகுதியில் இன்று நடைபெற இருந்த திருமண விழாவில் மணப்பெண்ணை அவரது முன்னாள் காதலரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    மணப்பெண் காஜலுக்கு இன்று திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, திடீரென துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டுள்ளது. இதைக் கேட்டு அதிர்ந்த காஜலின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

    அங்கு, வாலிபர் ஒருவர் காஜலை துப்பாக்கியால் சுட்டது தெரியவந்தது. ரத்த காயத்தில் மயங்கி விழுந்த காஜல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பந்தப்பட்ட நபர் காஜலின் முன்னாள் காதலன் என்றும், திருமணம் செய்துக் கொள்ளாத விரக்தியில் கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து மணப்பெண்ணின் தந்தை குபி ராம் பிரஜாபதி கூறுகையில், "ஜெய் மாலா என்கிற சடங்கு முடிந்து உடை மாற்றுவதற்காக எனது மகள் அறைக்கு சென்றார். அப்போது அடையாளம் தெரியாத நபர் வந்து சுட்டுக் கொன்றார். இது நடந்ததை என்னால் நம்ப முடியவில்லை" என்றார்.

    சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருவதாக மதுராவில் உள்ள எஸ்பி (ஊரகம்) ஸ்ரீஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.

    இதையும் படியுங்கள்.. இலங்கை மக்களுக்கு ரூ.123 கோடி மதிப்பிலான அரிசி, மருந்து வகைகள் வழங்க அரசு முடிவு- மு.க.ஸ்டாலின் பேச்சு
    Next Story
    ×