search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    வங்கி மற்றும் பிற துறைகளில் சீர்திருத்தங்களை பரிந்துரைக்க தொழில்முனைவோர் குழுவை உருவாக்குங்கள்- பிரதமர் மோடி

    மிகவும் சாதாரண குடும்பத்தில் இருந்து வரும் எவரும் தொழில்முனைவோராக முடியும் என்ற சூழலை உருவாக்க அரசாங்கம் உழைத்து வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
    குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று உலகளாவிய படிதார் வணிக உச்சி மாநாட்டை பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.

    பின்னர் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:-

    வங்கி மற்றும் பிற துறைகளில் உள்ள குறைபாடுகள் மற்றும் சீர்திருத்தங்கள் மற்றும் அதை எவ்வாறு மாற்றுவது என்பதை பிரந்துரைக்க தொழில்முனைவோர் மற்றும் நிபுணர்களின் குழுவை உருவாக்குமாறு நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன்.

    மிகவும் சாதாரண குடும்பத்தில் இருந்து வரும் எவரும் தொழில்முனைவோராக முடியும் என்ற சூழலை உருவாக்க அரசாங்கம் உழைத்து வருகிறது. தனித்துவமாக இருந்து அதில் பெருமிதம் கொள்ளுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்.. தி.மு.க. மீதான விசுவாசத்தை காட்ட ஜெயலலிதாவை விமர்சிப்பதா?- காங்கிரஸ் கட்சிக்கு டி.ஜெயக்குமார் கண்டனம்
    Next Story
    ×