search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    வைரலாகும் வீடியோ
    X
    வைரலாகும் வீடியோ

    காவல் நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு மசாஜ் செய்துவிடும் பெண்- வைரலான வீடியோவால் பரபரப்பு

    அந்த வீடியோவில் போலீஸ் அதிகாரி மசாஜ் செய்யும் பெண்மணியின் வழக்கு ஒன்று குறித்து பேசிக்கொண்டிருக்கிறார்.
    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் போலீஸ் அதிகாரி ஒருவருக்கு, பெண்மணி ஒருவர் மசாஜ் செய்து விடும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பீகார் மாநிலத்தில் உள்ள நெளஹட்டா காவல் நிலையத்தில் மூத்த அதிகாரியாக சஷிபூஷன் சிங்கா பணியாற்றி வருகிறார். அவர் சட்டையில்லாமல் அமர்ந்திருக்க பெண்மணி ஒருவர் மசாஜ் செய்து வருவது போல வீடியோ வெளியாகியுள்ளது. மேலும் அந்த வீடியோவில் அந்த போலீஸ் அதிகாரி மசாஜ் செய்யும் பெண்மணியின் வழக்கு ஒன்று குறித்து பேசிக்கொண்டிருக்கிறார்.

    இந்த வீடியோ போலீஸ் ஸ்டேஷன் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ வைரலான நிலையில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
    Next Story
    ×