search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின்
    X
    டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின்

    டெல்லியில் கொரோனா தொற்று அதிகரித்தாலும், மருத்துவமனையில் அனுமதிக்கும் விகிதம் குறைவாகவே உள்ளது- அமைச்சர்

    கொரோனா தொற்று குறித்து குழந்தைகள் மத்தியில் பீதியடைய தேவையில்லை என்று டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.
    நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, நாட்டின் தலைநகரான டெல்லியில் தொற்று அதிகரிக்கும் விகிதம் உயர்ந்து வருகிறது.

    இந்நிலையில், டெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும், மக்கள் கடுமையாக பாதிக்கப்படவில்லை என்றும், இதனால் மருத்துவமனையில் சேர்க்கும் விகிதம் குறைவாகவே இருப்பதாகவும் அம்மாநில சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மேலும் கூறியதாவது:-

    டெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், மக்களுக்கு கடுமையான பாதிப்பு இல்லை. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கும் விகிதமும் குறைவாக உள்ளது. இதற்கு காரணம், கடந்த காலங்களில் ஏராளமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டிருப்பதால் கொரோனாவால் பெரிதளவில் பாதிப்பில்லை.

    இதேபோல், கொரோனா தொற்று குறித்து குழந்தைகள் மத்தியில் பீதியடைய தேவையில்லை.  தற்போது எங்களிடம் சுமார் ஆயிரம் படுக்கைகள் உள்ளன. தேவைப்பட்டால் அவற்றின் எண்ணிக்கையை அதிகரிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்.. பெட்ரோல் வாட் வரி குறைப்பு கருத்துக்கு பிரதமர் மோடி வெட்கப்பட வேண்டும்- எதிர்க்கட்சி முதலமைச்சர்கள் ஆவேசம்
    Next Story
    ×