என் மலர்

  இந்தியா

  குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடம்
  X
  குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடம்

  சீனர்களை ரத்தம் சிந்த வைத்தவர்கள் பதில் சொல்லியாக வேண்டும்- சீனா எச்சரிக்கை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது.
  பெய்ஜிங்:

  பாகிஸ்தானின் கராச்சி பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடந்த குண்டு வெடிப்பில் 3 சீனர்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். உள்ளூர் மாணவர்களுக்கு சீன மொழியைக் கற்பிக்கும் கன்பூசியஸ் இன்ஸ்டிடியூட் அருகே குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. தற்கொலையை சேர்ந்த பெண் ஒருவர் வெடிகுண்டை உடலில் அணிந்து வந்து வெடிக்க வைத்தது வீடியோவில் தெரிய வந்தது.

  இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பில் சீன குடிமக்களை ரத்தம் செய்த வைத்தவர்கள் நிச்சயம் பதில் சொல்லியே ஆக வேண்டும் என சீன அரசு எச்சரித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  பாகிஸ்தான் அரசு அந்நாட்டில் உள்ள சீனர்களுக்கு வழங்கும் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும். மேலும் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும்.

  சீனர்கள் சிந்திய ரத்தம் வீணாகக்கூடாது. இந்த சம்பவத்திற்கு பின்னாள் இருக்கும் ஒவ்வொருவரும் நிச்சயம் உரிய விலையை கொடுத்தாக வேண்டும்.

  இவ்வாறு சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.

  குண்டு வெடிப்பு நிகழ்த்திய பெண்

  இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது. பலுசிஸ்தானில் இருந்து சீனாவும், பாகிஸ்தானும் உடனடியாக பின்வாங்க வேண்டும் என அந்த அமைப்பு இரு நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

  தற்கொலை வெடிகுண்டாக மாறிய பெண்ணுக்கு 2 குழந்தைகள் இருப்பதாகவும், அவரது கணவர் மருத்துவர் என்றும் கூறப்படுகிறது. அவருடைய புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
  Next Story
  ×