search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
    X
    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

    குஜராத்தை சேர்ந்தவர் என்ற முறையில் அரவிந்தர் 150-வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்பதில் பெருமிதம்: அமித் ஷா பேச்சு

    விழாவில் ஸ்ரீஅரவிந்தரும், இந்திய அரசியலமைப்பும் என்ற புத்தகத்தை வெளியிட்டு மத்திய மந்திரி அமித் ஷா பேசினார்.
    புதுவை பல்கலைக் கழகத்தில் மகான் அரவிந்தரின் 150-வது பிறந்த நாள் விழா நடந்தது.

    விழாவுக்கு அரபிந்தோ சொசைட்டி விஜய் வரவேற்றார். கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி முன்னிலை வகித்தனர். மத்திய மந்திரி அமித் ஷா தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

    விழாவில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம், அரபிந்தோ சொசைட்டி சேர்மன் பிரதீப்நாரான்ஜி, தலைமை செயலர் அஸ்வனிகுமார், பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத்சிங் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    புதுவை சிறைத்துறை ஐ.ஜி. ரவீதீப்சிங் சாகர், கண்காணிப்பாளர் பாஸ்கர் ஆகியோர் சிறை கைதிகளால் உருவாக்கப்பட்ட பரிசு பொருட்களை மத்திய மந்திரி அமித் ஷாவுக்கு வழங்கினர்.

    விழாவில் ஸ்ரீஅரவிந்தரும், இந்திய அரசியலமைப்பும் என்ற புத்தகத்தை வெளியிட்டு மத்திய மந்திரி அமித் ஷா பேசினார்.

    குஜராத்தை சேர்ந்தவன் என்ற முறையில் அரவிந்தரின் 150-வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்பதில் பெருமிதம் அடைகிறேன்.

    அரவிந்தருக்கும், குஜராத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. நாட்டின் விடுதலைக்காக லட்சக்கணக்கானவர்கள் தியாகம் செய்துள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவை தொடர்ந்து கார் மூலம் கவர்னர் மாளிகை சென்ற அமித் ஷா அங்கு உணவருந்தி சிறிதுநேரம் ஓய்வெடுத்தார். பின்னர் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், கட்சியின் நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் 2 மணிக்கு கம்பன் கலையரங்கில் நடந்த அரசு விழாவில் மத்திய மந்திரி அமித் ஷா பங்கேற்றார்.

    அங்கு நடந்த விழாவில், சுற்றுலாத்துறையின் சார்பில், பழைய துறைமுக வளாகத்தில் உள்ள 3 கிடங்குகள் புனரமைக்கப்பட்டு கடற்கரை நடைபாதையோடு இணைத்து வசதிகள் செய்து மறுபயன் பாட்டிற்கு கொண்டு வரும் திட்டம், முருங்கப்பாக்கத்தில் மேம் படுத்தப்பட்ட பிரெஞ்சு தமிழ் கிராமம் ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பஸ் நிலையத்தை மேம்படுத்துதல், கிழக்கு கடற்கரை சாலையில் புதிய பஸ் நிலைய முனையம் கட்டுமானத்துக்கு அடிக்கல், பெரியவாய்க்காலை ஆழப்படுத்தி மேம்படுத்தும் திட்டம், தாவரவியல் பூங்கா மேம்பாடு, நகர வனப்பகுதியில் சுற்றுலா திட்டம், குமரகுரு பள்ளத்தில் 216 தொகுப்பு வீடுகள் கட்டுதல், புதுவை அரசின் பொதுப் பணித்துறையின் கீழ் அரும்பார்த்தபுரம் நடேசன் நகர் பிரிவில் உள்ள தேசிய நெடுஞ்சாலை இணைப்பு சாலையாக புறவழிச்சாலை கட்டுமான பணி ஆகிய திட்டங்களை தொடங்கி வைத்து பேசுகிறார்.

    விழாவினை தொடர்ந்து இந்திராகாந்தி சதுக்கத்தின் அருகில் உள்ள பா.ஜனதா அலுவலகத்துக்கு செல்லும் அமித்ஷா அங்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

    பின்னர் அங்கிருந்து கார் மூலம் லாஸ்பேட்டை விமான நிலையம் செல்லும் அமித்ஷா மாலை 5 மணிக்கு புதுவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை செல்கிறார்.

    இதையும் படியுங்கள்.. அடுத்தடுத்து 5 பேர் பலி- கிராமத்தை பேய்கள் சூழ்ந்ததாக ஊரடங்கு ஏற்படுத்திய மக்கள்
    Next Story
    ×