என் மலர்

  இந்தியா

  முப்படையினர் அணிவகுப்பை பார்வையிட்ட போரிஸ் ஜான்சன்
  X
  முப்படையினர் அணிவகுப்பை பார்வையிட்ட போரிஸ் ஜான்சன்

  இங்கிலாந்து பிரதமருக்கு, குடியரசு தலைவர் மாளிகையில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
  புதுடெல்லி:

  இந்தியாவில் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று குஜராத் மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். 

  அகமதாபாத்தில் மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்தை சுற்றி பார்த்த அவர், அங்கு வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி நூல் நூற்ற ராட்டையில் நூல் நூற்று பார்த்து மகிழ்ந்தார்.

  குஜராத் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, டெல்லி வந்த போரிஸ் ஜான்சனுக்கு இன்று காலை குடியரசு தலைவர் மாளிகையில் பாரம்பரிய முறைபடி வரவேற்பு அளிக்கப்பட்டது. 

  அங்கு நடைபெற்ற முப்படையினர் அணிவகுப்பு மரியாதை அவர் ஏற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, போரிஸ் ஜான்சனுடன் கைகுலுக்கி வரவேற்றார்.  

  போரிஸ் ஜான்சனை வரவேற்றார் பிரதமர் மோடி

  அப்போது பேசிய போரிஸ் ஜான்சன், இந்தியா அளித்த அருமையான வரவேற்புற்கு நன்றி என்றும், இதற்கு முன்பை விட தற்போது இரு நாடுகள் இடையேயான உறவு வலுவாகவும், சிறப்பாகவும் உள்ளது என்றும் கூறினார்.

  முன்னதாக டெல்லி ராஜ்காட்டில் மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்ற ஜான்சன்,  மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அங்கிருந்து புத்தகத்தில் இது குறித்து எழுதி அவர் கையெழுத்திட்டார்.‘

  Next Story
  ×