என் மலர்

  இந்தியா

  எடியூரப்பா
  X
  எடியூரப்பா

  கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக 150 தொகுதிகளில் வெற்றி பெறும்: எடியூரப்பா நம்பிக்கை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வரும் நாட்களில் மத்திய-மாநில அரசுகளின் திட்டங்களை மக்களிடம் எடுத்து செல்வோம். அதன் மூலம் பா.ஜனதாவை பலப்படுத்துவோம் என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
  பெங்களூரு:

  முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூரு தேவனஹள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

  அகில இந்திய காங்கிரஸ் கட்சி, தலைமை இல்லாமல் மூழ்கி வருகிறது. இது ஒரு மூழ்கும் படகு. கர்நாடகத்தில் மட்டும் சிறிது மூச்சு விட்டு கொண்டிருக்கிறது. வரும் தேர்தலில் இங்கும் காங்கிரஸ் தோல்வி அடையும். கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 150 இடங்களில் வெற்றி பெறும். இதற்காக நாங்கள் இப்போதே பணியை தொடங்கிவிட்டோம். உலகமே வியக்கும் வகையில் பிரதமர் மோடி ஆட்சி செய்து வருகிறார். விவசாய பாதுகாப்பு, நிதி பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

  வரும் நாட்களில் மத்திய-மாநில அரசுகளின் திட்டங்களை மக்களிடம் எடுத்து செல்வோம். அதன் மூலம் பா.ஜனதாவை பலப்படுத்துவோம். கிருஷ் சம்மான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மத்திய-மாநில அரசுகள் ஆண்டுக்கு தலா ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்குகின்றன. விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்த பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

  இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
  Next Story
  ×