என் மலர்

  இந்தியா

  ஜிக்னேஷ் மேவானி
  X
  ஜிக்னேஷ் மேவானி

  குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி நள்ளிரவில் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  என்ன வழக்கு உள்ளிட்ட எந்த விவரங்களையும் போலீசார் தெரிவிக்கவில்லை என ஜிக்னேஷ் தரப்பில் கூறப்படுகிறது.
  அகமதாபாத்:

  குஜராத் சுயேட்சை எம்எல்ஏவும், இளம் தலித் தலைவருமான ஜிக்னேஷ் மேவானி நள்ளிரவில் அஸாம் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

  சமூக வலைதளத்தில் நாதுராம் கோட்சே குறித்து ட்வீட் செய்து சமூகங்களிடையே விரோதத்தை ஏற்படுத்தியதற்காக அவர் கைது செய்யபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

  பாலன்பூர் சர்க்யூட் ஹவுஸில் இருந்தபோது அவரை கைது செய்த போலீசார், என்ன வழக்கு உள்ளிட்ட எந்த விவரங்களையும் அவர்கள் ஜிக்னேஷ் தரப்பினருக்கு தெரிவிக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது. 

  இதுதொடர்பாக பேசிய ஜிக்னேஷ் தரப்பினர், "கைது ஏன், என்ன வழக்கு என்பதைகூட சொல்லாமல் கைது செய்தனர். எஃப்ஐஆர் நகலையும் வந்தவர்கள் எங்களிடம் காண்பிக்கவில்லை. அசாமில் பதிவு செய்யப்பட்டுள்ள சில வழக்குகள் குறித்தே கைது என்பது மட்டுமே எங்களிடம் கூறினர்" என்று தெரிவித்துள்ளனர்.
  Next Story
  ×