என் மலர்

  இந்தியா

  கொரோனா தொற்று
  X
  கொரோனா தொற்று

  உ.பி கவுதம் புத் நகரில் 33 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உ.பி கவுதம் புத் நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 411-ஆக உயர்ந்துள்ளது.
  இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துவிட்டது. தினசரி பாதிப்பில் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த கொரோனா தொற்று எண்ணிக்கை உயரத் தொடங்கியுள்ளது.

  பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

  இந்நிலையில், உத்தர பிரதேசம் மாநிலத்தில் ஒரே நாளில் 33 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உ.பி மாநிலம் கவுதம் புத்த நகர் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. சோதனை செய்த 107 பேரில் முப்பத்து மூன்று குழந்தைகள் உள்ளடங்குவார்கள்.

  இதன் மூலம், கவுதம் புத் நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 411-ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம் 32 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

   கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் இருப்பினும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அம்மாவட்ட நீதிபதி சுஹாஸ் எல் யதிராஜ் தெரிவித்துள்ளார்.

  கொரோனா தொற்று தொடர்பான உதவிகளுக்கு 1800492211 என்ற ஹெல்ப்லைன் எண்ணைத் தொடர்புகொள்ளுமாறும் மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

  இதையும் படியுங்கள்.. தென்மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்
  Next Story
  ×