என் மலர்

  இந்தியா

  பிரதமர் மோடி- விஸ்வா தீனதயாளன்
  X
  பிரதமர் மோடி- விஸ்வா தீனதயாளன்

  தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் மறைவு- பிரதமர் மோடி இரங்கல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டேபிள் டென்னிஸ் வீரர் தீனதயாளன் கவுகாத்தியில் இருந்து காரில் சென்றுகொண்டிருந்தபோது லாரி மோதி உயிரிழந்தார்.
  புது டெல்லி:

  83-வது சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ள தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் (18) மற்றும் 3 வீரர்கள், அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து நேற்று காரில் ஷில்லாங் நோக்கி சென்றுகொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த லாரி மோதி கார் டிரைவர் மற்றும் தீனதயாளன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். 

  காரில் இருந்த மற்ற 3 பேர் படுகாயமடைந்தனர். தீனதயாளனின் உடல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் விஸ்வா தீனதயாளனின் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி கூறியதாவது:-

  டேபிள் டென்னிஸ் சாம்பியன் விஸ்வா தீனதயாளனின் மறைவு அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது. அவர் மற்ற வீரர்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர். பல போட்டிகளில் தன் தனித்திறமையை நிரூபித்தவர். இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவருடைய குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் இருக்கும். ஓம் சாந்தி.

  இவ்வாறு பிரதமர் மோடி கூறியிருந்தார்.
  Next Story
  ×