search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    இந்தியாவில் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

    விடுமுறை நாளான நேற்று 2,84,073 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 184 கோடியே 70 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    நாட்டில் கொரோனா பாதிப்பு, பலி எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிறது.

    மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 913 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.

    இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 29 ஆயிரத்து 44 ஆக உயர்ந்தது.

    பாதிப்பை பலி எண்ணிக்கையும் நேற்று வெகுவாக குறைந்துள்ளது. கேரளாவில் புதிதாக உயிரிழப்புகள் எதுவும் இல்லாத நிலையில், விடுபட்ட 8 மரணங்கள் நேற்றைய பட்டியலில் சேர்க்கப்பட்டது.

    இதுதவிர மகாராஷ்டிராவில் 2, மேற்குவங்கத்தில் 2, மிசோரத்தில் ஒருவர் என மேலும் 13 பேர் இறந்துள்ளனர். இதுவரை பலியானவர்கள் பலி எண்ணிக்கை 5,21,358 ஆக உயர்ந்துள்ளது.

    தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1,316 பேர் நேற்று நலம் பெற்றுள்ளனர்.

    இதன் மூலம் இதுவரை குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 95 ஆயிரத்து 89 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 12,597 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    விடுமுறை நாளான நேற்று 2,84,073 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 184 கோடியே 70 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

    இதேபோல நேற்று 3,14,823 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 79.10 கோடியாக உயர்ந்துள்ளது.

    Next Story
    ×