என் மலர்

  இந்தியா

  நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்
  X
  நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்

  நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்களை நேற்று சந்தித்துப் பேசினார்.
  புதுடெல்லி:

  டெல்லியில் கட்டப்பட்டுள்ள தி.மு.க. அலுவலக திறப்பு விழா நாளை  நடக்கிறது. இதற்காக தி.மு.க. சார்பில் எல்லா கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மாலை திறந்து வைக்கிறார்.

  இந்த விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். ஏராளமானோர் திரண்டு வந்து மு.க.ஸ்டாலினுக்கு கும்ப மரியாதையும் வழங்கினர்.

  நேற்று பாராளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலக அறையில் பிரதமர் மோடியை மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
  அப்போது, டெல்லி தி.மு.க. அலுவலக திறப்பு விழாவுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். அதற்கான அழைப்பிதழையும் வழங்கினார். அதன்பின், தமிழகத்துக்கான பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பிரதமரிடம் வலியுறுத்தினார்.

  இந்நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்தார்.

  அப்போது தமிழகத்துக்கு வர வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை உடனே விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கூறினார். அது மட்டுமின்றி தமிழக நலன் சார்ந்த திட்டங்களுக்கு தேவையான கூடுதல் நிதியை ஒதுக்கவும் கேட்டுக்கொண்டார். சுமார் 30 நிமிட நேரம் இந்த சந்திப்பு நடந்தது.

  Next Story
  ×