என் மலர்

  இந்தியா

  ஆதார், பான் கார்டு
  X
  ஆதார், பான் கார்டு

  ஆதாருடன் பான் கார்டு எண்ணை இணைக்க நாளை கடைசி நாள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆதாருடன் இணைக்கப்படாத பான் எண்ணை செயல்படாத எண்ணாக அறிவிக்கப்படும் என்று வருமான வரித்துறை கூறி உள்ளது.
  புதுடெல்லி:

  ஆதாருடன் பான் கார்டு எண்ணை இணைப்பதற்கு நாளை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கெடுவுக்குள் பான் கார்டு வைத்திருப்பவர்கள் ஆதாருடன் இணைக்க தவறும்பட்சத்தில் வருமான வரித்துறைக்கு அபராதம் செலுத்த நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆதாருடன் இணைக்கப்படாத பான் எண்ணை செயல்படாத எண்ணாக அறிவிக்கப்படும் என்று வருமான வரித்துறை கூறி உள்ளது.

  இதுதொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் 1ம் தேதி முதல் ஆதார்-பான் எண் இணைப்பு கட்டாயம் என்றும், அதன்பின்னர் முதல் மூன்று மாதத்திற்குள் பான் எண்ணை இணைக்காவிட்டால் 500 ரூபாய் அபராதம், அதன்பிறகு அபராத தொகை 1000 ரூபாயாக அதிகரிக்கப்படும் என கூறி உள்ளது.  

  ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு நிதி மசோதாவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆதார் மற்றும் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 
  Next Story
  ×