search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரதமர் மோடி- ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா
    X
    பிரதமர் மோடி- ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா

    இந்தியாவில் ரூ.3.20 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும்- ஜப்பான் பிரதமர் உறுதி

    பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோர் இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு பரிமாறிக்கொண்டனர்.
    டெல்லியில் இன்று 14-வது இந்தியா- ஜப்பான் இடையேயான வருடாந்திர உச்சி மாநாடு இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

    புதுடெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் இன்று மாலை 5 மணியளவில் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவை வரவேற்ற பிரதமர் மோடி 14-வது உச்ச மாநாட்டில் இருவரும், ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோர் இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு பரிமாறிக்கொண்டனர். குறிப்பாக, இணையப் பாதுகாப்பு, திறன் மேம்பாடு, தகவல் பகிர்வு மற்றும் ஒத்துழைப்பு ஆகிய துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

    அதன்பிறகு ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா கூறியதாவது:-

    திறந்த மற்றும் சுதந்திரமான இந்தோ-பசிபிக் பகுதிக்கான முயற்சிகளை நமது இரு நாடுகளும் அதிகரிக்க வேண்டும். ஜப்பான், இந்தியாவுடன் இணைந்து போரை முடிவுக்குக் கொண்டு வர முயற்சிக்கும். உக்ரைன் மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கு தொடர்ந்து ஆதரவை வழங்கும்.

    பல இடையூறுகளால் உலகமே இன்று அதிர்ந்து போயுள்ளது. இந்தியாவும் ஜப்பானும் நெருங்கிய கூட்டாண்மை கொண்டிருப்பது மிகவும் முட்டுக்கட்டையாக உள்ளது. நாங்கள் எங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினோம். உக்ரைனில் ரஷ்யாவின் தீவிர படையெடுப்பு பற்றி பேசினோம். சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் எங்களுக்கு அமைதியான தீர்வு தேவை.

    இந்தியாவில் 5 ட்ரில்லியன் யென்(சுமார் ₨3.20 லட்சம் கோடி) முதலீடு செய்யப்படும்.

    இந்தியா-ஜப்பான் அடுத்த பேச்சுவார்த்தையை கூடிய விரைவில் நடத்துவோம். இணையப் பாதுகாப்பில் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தையும் வரவேற்கிறோம். ஜப்பானுக்கு இந்தியா மிக முக்கிய கூட்டாளி. டோக்கியோவில் நடக்கும் குவாட் உச்சி மாநாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடியை அழைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்..  'ஒரு அணி- ஒரு திட்டம்': இந்தியா- ஜப்பான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை
    Next Story
    ×