என் மலர்

  இந்தியா

  சோனியா காந்தி
  X
  சோனியா காந்தி

  சோனியாகாந்தி தலைமையில் காங்கிரஸ் பாராளுமன்ற குழு கூட்டம் - இன்று காலை நடைபெறுகிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாளை தொடங்கும் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வில் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப் படுகிறது.
  புதுடெல்லி:
     
  உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. குறிப்பாக, பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்து ஆம் ஆத்மி முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது.

  மேலும், உத்தர பிரதேசத்தில் வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றிப் பெற்றது. 5 மாநில சட்டசபை தேர்தல் தோல்வி குறித்து விவாதிப்பதற்காக இன்று மாலை 4 மணியளவில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

  இந்நிலையில் காங்கிரஸ் பாராளுமன்ற வியூக குழு கூட்டத்திற்கு அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி அழைப்பு விடுத்துள்ளார். 

  டெல்லியில் இன்று காலை 10 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதில் நாளை தொடங்கும்  பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வில் போது எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.


  Next Story
  ×