search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாராளுமன்றம்
    X
    பாராளுமன்றம்

    13 மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு

    பஞ்சாப், கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களவை எம்பிக்களுக்கான தேர்தல் வரும் 31-ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மாநிலங்களவையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஏ.கே.அந்தோணி, ஆனந்த் சர்மா உள்பட 13 எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடைகிறது.

    இந்நிலையில், அந்த காலியிடங்களை நிரப்ப இம்மாதம் 31-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது என தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.

    பஞ்சாப்பில் 5, கேரளாவில் 3, அசாமில் 2, இமாசல பிரதேசம், திரிபுரா, நாகாலாந்தில் தலா ஒரு இடத்துக்கும் தேர்தல் நடக்கிறது.

    இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 14-ம் தேதி தொடங்குகிறது. மனுதாக்கலுக்கு 21-ம் தேதி இறுதிநாள் ஆகும்.

    31-ம் தேதி தேர்தல் முடிந்தவுடன் அதே நாள் மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×