search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    சமாஜ்வாடி பிரச்சார கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் - 7 பேர் மீது வழக்குப் பதிவு

    விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று, ஹண்டியா காவல் துறை தெரிவித்துள்ளது.
    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலத்தில் இதுவரை ஐந்து கட்ட தேர்தல்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில், 6 ஆம் கட்ட தேர்தல் 3ம் தேதி நடைபெறுகிறது.

    இந்நிலையில் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் நடைபெற்ற சமாஜ்வாடி கட்சி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பபட்டதாக புகார் எழுந்தது.

    அந்த பிரச்சார கூட்டத்தின் வீடியோவை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  

    அது சமாஜ்வாடி கூட்டம் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், ஆனால் வீடியோவில் இருக்கும் வேட்பாளர் யார் என்பது தெளிவாக தெரியவில்லை என்றும் ஹண்டியா பகுதி காவல்துறையினர் கூறியுள்ளனர். 

    பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை அடையாளம் காணும் பணி நடை பெறுவதாகவும், விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஹண்டியா சட்டசபைத் தொகுதி சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஹக்கிம் லால் பிந்த், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

    தாம் பங்கேற்ற பிரச்சார கூட்டங்களில் இதுபோன்ற கோஷங்கள் எழுப்பப் படவில்லை என்று அவர் கூறியுள்ளார். பாஜகவை சேர்ந்த சிலர் இது போன்ற டப்பிங் வீடியோவை வெளியிட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

    Next Story
    ×