என் மலர்

  இந்தியா

  அரவிந்த் கெஜ்ரிவால்
  X
  அரவிந்த் கெஜ்ரிவால்

  உத்தரபிரதேசத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் 4 நாட்கள் தேர்தல் பிரசாரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரபிரதேசத்தில் இன்று முதல் 4 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்கிறார்.
  லக்னோ:

  உத்தரபிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது. ஏற்கனவே 3 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துவிட்டது. தேர்தல் நடைபெற உள்ள மற்ற தொகுதிகளில் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

  உத்தரபிரதேச மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியும் போட்டியிடுகிறது. இதையொட்டி அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரபிரதேசத்தில் இன்று முதல் 4 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்கிறார்.

  இன்று அவர் குய்ஷார்பா பகுதியில் தனது பிரசாரத்தை தொடங்குகிறார். தொடர்ந்து அவர் 4 நாட்கள் பாராபாங்கி, பிரயாக்ராஜ் மற்றும் முதல்- மந்திரி யோகி ஆதித்யநாத் போட்டியிடும் கோரக்பூர் தொகுதியிலும் தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார்.

  அவருடன் கட்சியின் மாநில தேர்தல் பொறுப்பாளர் சஞ்சய்சிங் மற்றும் டெல்லி ஆம் ஆத்மி எம்.எல். ஏ.க்களும் பிரசாரம் செய்ய உள்ளனர்.
  Next Story
  ×