search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கொரோனா தொற்று
    X
    கொரோனா தொற்று

    51 நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்திற்கும் கீழ் சரிவு

    இந்தியாவில் தினசரி பாதிப்பு குறைந்து வரும் நிலையில், இன்று காலை நிலவரப்படி 2.24 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    நாட்டில் கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது.

    அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,968 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.

    கடந்த டிசம்பர் 30-ந் தேதி நிலவரப்படி, தினசரி பாதிப்பு 16,764 ஆக இருந்தது. இதன்மூலம் 51 நாட்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு மீண்டும் 20 ஆயிரத்திற்கும் கீழ் சரிந்துள்ளது.

    நாட்டில் மொத்த பாதிப்பு 4 கோடியே 28 லட்சத்து 22 ஆயிரத்து 473 ஆக உயர்ந்தது.

    தினசரி பாதிப்பு விகிதம் 1.80 சதவீதத்தில் இருந்து 1.68 ஆகவும், வாராந்திர பாதிப்பு விகிதம் 2.50 சதவீதத்தில் இருந்து 2.27 ஆகவும் குறைந்துள்ளது.

    கேரளாவிலும் தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. அங்கு புதிதாக 6,757 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மராட்டியத்தில் 1,635, கர்நாடகாவில் 1,137, தமிழ் நாட்டில் 1,051, ராஜஸ்தானில் 1,075, மத்திய பிரதேசத்தில் 1,013, மிசோரத்தில் 1,326 பேருக்கு தொற்று உறுதியானது.

    கொரோனா பாதிப்பால் கேரளாவில் விடுபட்ட மரணங்களையும் சேர்த்து 524 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 673 பேர் இறந்துள்ள னர். மொத்த பலி எண்ணிக்கை 5,11,903 ஆக உயர்ந்தது.

    தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 48,847 பேர் நலம் பெற்றுள்ளனர்.இதுவரை குணமடைந் தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 20 லட்சத்து 86 ஆயிரத்து 383 ஆக உயர்ந்தது.

    தற்போது சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 2,24,187 ஆக சரிந்துள்ளது. இது நேற்றுமுன்தினத்தை விட 29,552 குறைவு ஆகும்.

    நாடு முழுவதும் நேற்று மட்டும் 30,81,336 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 175 கோடியே 37 லட்சமாக உயர்ந்துள்ளது.

    இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 90.73 கோடி பேருக்கும், 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களில் 5.36 கோடி பேருக்கும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    18 வயதுக்கு மேற்பட் டவர்களில் 75.22 கோடி பேருக்கும், 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களில் 2.15 கோடி பேருக்கும் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

    இதற்கிடையே நேற்று 11,87,766 மாதிரிகள் பரி சோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 75.93 கோடியாக உயர்ந்துள்ளது.

    Next Story
    ×