என் மலர்

  இந்தியா

  தீ விபத்து
  X
  தீ விபத்து

  உத்தரபிரதேச்தில் மசாஜ் சென்டரில் தீ விபத்து: இளம்பெண்-ஊழியர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தீ விபத்தில் மசாஜ் சென்டரில் இருந்த 35 வயது ஊழியர் ஒருவரும், வேலைக்காக இன்டர்வியூக்கு வந்த 26 வயது இளம்பெண் ஒருவரும் மூச்சு திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
  நொய்டா:

  உத்தரபிரதேச மாநிலம், நொய்டாவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் மசாஜ் சென்டர் இயங்கி வருகிறது. இந்த மையத்தை சுத்தப்படுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

  அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென மசாஜ் சென்டர் முழுவதும் பரவியது. இதுபற்றி அறிந்ததும் தீயணைப்பு படையினர் அங்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

  இந்த தீ விபத்தில் மசாஜ் சென்டரில் இருந்த 35 வயது ஊழியர் ஒருவரும், வேலைக்காக இன்டர்வியூக்கு வந்த 26 வயது இளம்பெண் ஒருவரும் மூச்சு திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

  மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
  Next Story
  ×